ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

Published By: Robert

08 Sep, 2017 | 08:57 AM
image

நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக எதிர்வரும் மூன்று தினங்­க­ளுக்கு நாட்டின் ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்­கான அபாயம் இருப்­ப­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

Image result for மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

இவ்­ அ­னர்த்­தத்­தி­லி­ருந்து மக்­களை பாது­காப்­ப­தற்­கான சகல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளையும், பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் தற்­போது முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் அநு­ர ­பி­ரி­ய­தர்­ஷ­ன­ யாப்பா தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக களுத்­துறை, கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி, நுவ­ரெ­லியா உள்­ளிட்ட மாவட்­டங்­களில் எதிர்­வரும் 24 மணித்­தி­யா­லங்­களில் மண்­ச­ரிவு ஏற்­ப­டு­வ­தற்கு அபாயம் இருக்­கின்­றது. ஏனைய மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் காணப்படுகிறது. குறிப்­பாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அம்­ப­க­முவ பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்கள், களுத்­துறை மாவட்­டத்தின் அக­ல­வத்தை, புளத்­சிங்­கள, பலிந்­த­நு­வர ஆகிய பிர­தேச சபை­க­ளுக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­க­ளுக்கும் கேகாலை மாவட்­டத்தின் யட்­டி­யாந்­தோட்டை பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளுக்கும் மண்சரிவு ஏற்­ப­டு­வ­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் குரு­விட்ட பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்மித்த பகு­தி­க­ளுக்கும், காலி மாவட்­டத்­தின் நெலுவ பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பகு­திகள் மற்றும் அதனை அண்மித்த பகு­தி­கள், யத்­த­ள­மத்த பிர­தே­சத்­திலும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் தேசிய கட்­டட ஆய்­வுகள் நிறு­வனம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்­நி­லையில் குக்­கு­லே­ கங்­கையின் நீர்­மட்டம் அதி­க­ரித்­ததால் அதன் வான்­க­த­வுகள் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளன. இதனால் அதனை அண்­டிய பகு­தியில் வாழ்ந்து வந்த மக்­களை பாது­காப்­பான பகு­தி­களில் குடி­ய­மர்த்­து­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மேலும் கம்­பஹா, கொழும்பு உட்­பட பிர­தான நீர்த்­தேக்­கங்­களை அண்மித்த பகு­தி­களில் தற்­போது சிறு அள­வி­லான வெள்ளம் ஏற்­பட்­டுள்­ளது. இருப்­பினும் எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்கு தொடர்ந்து அவ­தானம் செலுத்­தப்­படும்.

மேலும் அனர்த்த நிலை­யி­லி­ருந்து மக்­களை பாது­காப்­ப­தற்கு அர­சாங்­கத்­தினால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. துரி­த­க­தியில் உத­வு­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இது தொடர்பில் முன்­கூட்­டியே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை வெள்ளம் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் மக்­களை பாது­காப்­ப­தற்கு இரத்­தி­ன­புரி மாவட்­டத்­திற்கு 5 தண்­ணீர் பவு­ஸர்­களும் 15 பட­கு­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் களுத்­துறை மாவட்­டத்­திற்­கு 40 பட­கு­களும், இரத்­தி­ன­புரி மாவட்­டத்திற்கு 14 படகுகளும், வழங்கப்பட்டு சகல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அனர்த்த முகாமைத்துவத் தின் நிவாரண உதவிப் பிரிவினர் 24 மணித்தியால சேவையை வழங்கவுள்ளதுடன் உதவிகளையும் கோர முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை...

2024-02-26 19:42:03
news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36
news-image

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு...

2024-02-26 18:21:31
news-image

பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார ...

2024-02-26 17:55:39
news-image

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை அனுப்ப விடுக்கப்பட்ட...

2024-02-26 17:47:41
news-image

அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார்...

2024-02-26 17:32:15
news-image

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்...

2024-02-26 17:21:22
news-image

பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

2024-02-26 17:03:49
news-image

அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது...

2024-02-26 17:20:05
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் பண்ணையாளர்களின் போராட்டம்...

2024-02-26 16:41:29
news-image

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை !

2024-02-26 16:04:31