இலங்கையின் முன்னணி பயண முகாமைத்துவ நிறுவனமாக விளங்கும் எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உலக பேண்தகு சுற்றுலா பேரவை (GSTC) வழங்கும் சான்றிதழ் கிடைக்கப்பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இது இந்நிறுவனத்தின் பேண்தகுதன்மை பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முக்கிய மைற்கல்லாகும்.
GSTC, உலகளவில் மிகவும் விரிவான மற்றும் மதிப்புமிக்க பேண்தகு சுற்றுலா வழிகாட்டி அமைப்பாகும். இது பேண்தகு முகாமைத்துவம், உள்ளுர் சமூகங்களுக்கான சமூக-பொருளாதார நன்மைகள், பண்பாட்டு பாரம்பரியத்தின் பாதுகாப்பு மற்றும் சூழல் பொறுப்பு ஆகிய நான்கு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
GSTC சான்றிதழை அடைந்துகொள்வது ஒரு எளிதான செயல்முறை அல்ல. இது கடுமையான மற்றும் விரிவான மதிப்பீட்டு செயல்முறையை வேண்டிநிற்கிறது. நிறுவனத்தின் அனைத்து நிலைகளிலுமான ஈடுபாடு, வழங்கல் சங்கிலி விதிமுறைகளின் இணக்கப்பாடு, சூழல் செயலாற்றுகையின் தொடர்ச்சியான கண்காணிப்பு, விரிவான ஆவணப்படுத்தல் மற்றும் GSTC அங்கீகரித்த சுயாதீன மூன்றாம் தரப்பு அமைப்பினால் நேரடி தள ஆய்வுகள் ஆகியவற்றை இது தேவைப்படுத்துகிறது. இது சாதாரண விதிமுறை இணக்கப்பாடுகளைக் கடந்து, நிறுவனத்தின் கூட்டுறவு மூலோபாயம், செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புகளில் பேண்தகுதன்மையை உள்ளீர்க்கும் முழுமையான அணுகுமுறையாகும்.
எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனத்தில், இந்த சான்றிதழ் பேண்தகுதன்மை கொள்கைகள் நிறுவனத்தின் முழு செயல்பாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இது கொள்கை மட்டத்தில் மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாட்டு தாக்கத்தையும் வெளிப்படுத்தும் அளவிடக்கூடிய அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த மைற்கல் சாதனை குறித்து கருத்து தெரிவித்த எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. நலின் ஜயசுந்தர, "இந்த சாதனை அனைத்து பேண்தகுதன்மை சான்றிதழ்களிலும் உயர்ந்த அங்கீகாரமாகும். GSTC மற்றும் Travelife ஆகிய இரு சான்றிதழ்களையும் பெற்றுள்ள பயண முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதில் உண்மையிலேயே நாம் பெருமை அடைகிறோம். எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனத்தில் பேண்தகுதன்மை என்பது ஒரு தனித்த முயற்சியாக அன்றி தெளிவான தலைமைத்துவமும் வலுவான ஆளுகை முறையுமாக முன்னெடுக்கப்படுகிறது.
GSTC சான்றிதழ் உலகளவில் பேண்தகு சுற்றுலாவின் உயர்ந்த தரச்சான்றாகும். எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனத்தில் பேண்தகுதன்மை ஒரு தனித்த முயற்சி அல்ல, அது எங்களின் மூலோபாயத் திசைவழி மற்றும் ஆளுகை அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
எயிட்கன் ஸ்பென்ஸ் பீஎல்சி குழுமத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் எங்களின் மூலோபாயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, எங்களின் தாக்கம் ஒருங்கிணைந்த, அளவிடக்கூடிய மற்றும் அர்த்தமுள்ளதாக காணப்படுகிறது. சுற்றுலா துறையின் முன்னணி நிறுவனம் என்ற வகையில், நாங்கள் சொல்லுவது போல செயற்படுவதில் நம்பிக்கை வைக்கிறோம். இந்த சான்றிதழானது பொறுப்பான சுற்றுலாவிற்கான எங்களின் அர்ப்பணிப்பு உண்மையானது, ஒழுங்கமைக்கப்பட்டது மற்றும் நிறுவனம் முழுவதிலும் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
உலகளாவிய பயணிகள் சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வரும் நிலையில், GSTC சான்றிதழ் எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனம் வழங்கும் அனுபவங்கள் இலங்கையின் இயற்கை அமைப்புகளை மதித்து, பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாத்து, உள்ளுர் சமூகங்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை உருவாக்குகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. இது இன்றைய பயணிகளுக்காக மட்டுமல்லாது, எதிர்கால சுற்றுலா முன்பதிவுகளின் பேண்தகுதன்மையையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த GSTC சான்றிதழ் சாதனை, இலங்கையின் சுற்றுலா துறையில் எயிட்கன் ஸ்பென்ஸ் டிரவல்ஸ் நிறுவனத்தை பேண்தகுதன்மையின் ஒரு முன்னணித் தலைவராக உறுதிப்படுத்துகிறது. இது பொறுப்பான சுற்றுலா என்பது வெறுமனே ஒரு இலட்சியம் அல்ல, நிறுவனத்தின் அடையாளத்தில் ஆழமாக பதியப்பட்ட, சரிபார்க்கப்பட்ட மற்றும் அளவிடக்கூடிய ஒரு தரநிலையாகும் என்பதை வெளிப்படுத்துகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM