திருகோணமலை - மொரவெவயில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டொன்று வெடித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 4 படையினர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்  பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற விமானப்படை முகாமில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட போது, இராணுவ வீரரொருவர், கைக்குண்டை வீசும் முறை தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.