திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் சுற்றிவரக் கட்டப்படாதிருந்த தோட்டக் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 6) என்ற சிறுவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டபோது, அவனது வயிற்றில் பெரிய கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

 தனது சகோதரனுடனும் மற்றுமொரு சிறுவனுடனும் இந்தச் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். இதன் பின்னர், சகோதரனும் மற்றைய சிறுவனும் வீடு திரும்பியுள்ளனர்.

 ஆனால், வீடு திரும்பாத குகதாஸ் தர்சனை என்ற  அவனது தாய் தேடியதுடன், இது தொடர்பில் சம்பூர் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

 இந்நிலையில், பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சிறுவனை தேடியபோது, குறித்த கிணற்றில் சிறுவன்  சடலமாக காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.