எரிபொருள் விநியோகச் சிக்கல்கள்  - அமைச்சரவை முக்கிய நடவடிக்கைகள்

17 Mar, 2026 | 03:04 PM
image

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள யுத்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டும், தற்போது நிலவும் எரிபொருள் இருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் 2026.03.16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரச அலுவலகங்களைச் சாதாரண முறையில் நடாத்திச் செல்லும்போது உத்தியோகத்தர்களின் போக்குவரத்து மற்றும் அலுவலகப் பராமரிப்பிற்காகக் கணிசமான எரிபொருள் பயன்படுத்தப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரச அலுவலகக் கடமைகளுக்கான விடுமுறை தினமாகக் கருதப்படல் வேண்டும்.

புதன்கிழமைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கடமைகளை அவ்வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளுதல் வேண்டும். ஆயினும், ஸ்தாபனத் தலைவர் ஒரு உத்தியோகத்தரைச் சேவைக்கு அழைக்கத் தீர்மானிப்பின், அதற்குத் தடையிருக்காது. இதற்காக விடுமுறை தினச் சம்பளம், மேலதிக நேரம் அல்லது ஈடுசெய் விடுமுறைகள் வழங்கப்பட மாட்டாது.

உத்தியோகத்தரை அலுவலகத்திற்கு அழைக்காது, ஏற்கனவே உள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தித் தேவையான கடமைகளை நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டமொன்றினை திணைக்கள/கூட்டுத்தாபனத் தலைவர்கள் தயாரித்துக்கொள்ள முடியும்.

புதன்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களின் உத்தியோகத்தர்களை, அவ்வாரத்தின் சனி, ஞாயிறு அல்லது அரச விடுமுறை தினங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவு அல்லது ஈடுசெய் விடுமுறை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தக் கூடாது.

அவசரத் தேவையின் அடிப்படையில் விடுமுறை நாட்களில் உத்தியோகத்தர்களை அழைக்க வேண்டியிருப்பின், உரிய செயலாளர்கள் அல்லது தலைவர்களின் அனுமதியுடன் அழைக்க முடியும். இதற்காக மேலதிக நேரக் கொடுப்பனவு அல்லது ஈடுசெய் விடுமுறை வழங்கத் தடையிருக்காது.

டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தக் கடமைகளுக்காக உத்தியோகத்தர்களை அழைப்பதற்கான அதிகாரம் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறை: நீதிச் சேவை ஆணைக்குழுவின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்கள்: கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

கூட்டுத்தாபனங்கள்: ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரிடம் வினவி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலதிகக் கட்டுப்பாடுகள்: அரச நிறுவனங்களில் விழாக்கள் மற்றும் கருத்தரங்குகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான 04/2022 இலக்கச் சுற்றறிக்கையையும் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள்: அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சுழற்சி முறையில் இயங்கும் தாபனங்களுக்கு இந்த விடுமுறை முறைமை பொருந்தாது. அவை புதன்கிழமையைச் சாதாரண கடமை நாளாகக் கருதிச் செயற்படவேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44
news-image

கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர்...

2026-09-05 11:38:53
news-image

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை...

2026-09-05 11:21:34
news-image

தொம்பே பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத...

2026-09-05 11:18:09
news-image

வாழ்வாதாரம் பறிபோகும் அபாயத்தில் இளம் சாரதிகள்!...

2026-09-05 11:08:02
news-image

மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து T56 துப்பாக்கி...

2026-09-05 10:34:27
news-image

கியூ.ஆர் முறையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்:...

2026-09-05 10:18:34