தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

Published By: Digital Desk 3

17 Mar, 2026 | 02:10 PM
image

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை திமுது சமூக அபிவிருத்து சங்கத்தின் தலைவர் சங். நாகொல்லே நந்தரத்ன தேரருடன் கைச்சாத்திடப்பட்டது. 

ஜப்பான் அரசு திமுது சமூக அபிவிருத்து சங்கம் செயல்படுத்தும்  திட்டத்திற்கு 25,432 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 7.8 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலமொன்றை  கட்டுறுதியாக பலப்படுத்தவும் மற்றும் பாலத்தை பாதுகாக்கும் முகமாக காப்பு சுவர் ஒன்றை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கும். இது 3,200 குடியிருப்பாளர்களின் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும்.

இலங்கையின் இயற்கை பேரழிவுகள் மீட்பு பணியில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்த ஜப்பான் கவனம் செலுத்துவதை வலியுறுத்தி தூதுவர் ISOMATA தெரிவிக்கையில்,

தற்போது இலங்கை மீட்பு மற்றும் மீளமைப்பு கட்டத்தை அடைந்துள்ளதால், ஜப்பான் இலங்கை மக்களிற்கு துணை நிற்பதில் உறுதியாக உள்ளது. நாம் இன்று கைச்சாத்திட்ட திட்டம், டிட்வா சூறாவளியால் பாதிப்படைந்த பகுதிகளின் மீட்பு, மீள் புனரமைப்பு மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களிடையே நிலைத்திருக்கும் நட்புறவை நீடிக்கும் சின்னமாகவும் திகளும் என்றார்.

இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த திமுது சமூக அபிவிருத்து சங்கத்தின் தலைவர் சங். நாகொல்லே நந்தரத்ன தேரர், இவ்வாறு தெரிவித்தார்.

“ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகள் ஒரு அழகான, நீண்டகால நட்புறவைப் பேணிவருகின்றன. அபிவிருத்திக்கு மேலாக, எப்போதும் ஜப்பானியர்கள் துல்லியத்துடனும், ஒழுங்குடனும் மற்றும் கருணையுடனும் செயல்படும் முறையைக் கண்டு நாம் மகிழ்ந்துள்ளோம். எங்கள் நீர்வளத் திட்டம் மற்றும் சமூக கட்டட நிர்மானம் போன்ற கடந்த கால செயற்திட்டங்களுக்கு இது வழிகாட்டியதாக அமைந்துள்ளது. இந்த நிதியுதவியை வழங்கிய தூதரகம், மதிப்புமிக்க ஜப்பானிய தூதர் மற்றும் தூதரக பணியாளர்கள், எங்கள் ஒருங்கிணைப்பாளருக்கும் எமது நன்றிகள்.” என்றார்.

1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27