மாற்றுக்கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது பொறிமுறையாகும். அதுவே இன்று நிஜமாகியும் இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
அன்று நாம் மாற்றுக் கொள்கையுடன் மக்களின் அபிலாசைகளுக்காக திட்டங்களை முன்னெடுத்தபோது இதர தமிழ்த் தரப்பினர் ஏளனமாக பார்த்தனர்.
தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை பாதுகாக்கவும் இருப்பை தக்கவைக்கவும் தவறானதும் சாதகமற்றதுமான வழிமுறைக்கு சாமரம் வீசியதன் விளைவுகளை மக்களே அனுபவிக்க நேர்ந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் குணாம்சமான மாற்றம் தென்னிலங்கையில் ஏற்பட்டபோதும் அன்றிருந்த தமிழர் தரப்பில் அது ஏற்படாதிருந்ததன் விளைவாக கிடைக்கவிருந்த தீர்வுகளும் கைநழுவிச் சென்றுவிட்டன.
மக்களது உணர்வுபூர்வமான தேவைகளை உணர்ந்து அதை நிறைவேற்ற சாதகமான வழிமுறைகளை முன்னகர்த்துவது அவசியம். இதையே நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
இதேநேரம் தென்னிலங்கை கட்சிகளின் நேரடிப் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வோர் அக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற வகையில்தான் செயற்பட முடியும். அவர்கள் தன்னிச்சையாக செயற்பட முடியாது.
ஆனால் ஈ.பி.டி.பி அவ்வாறானதொன்று அல்ல. இதுவே எமக்கான தனித்துவம். எமது இந்த தனித்துவம் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்தே நாம் முன்னெடுத்து வந்திருக்கிறோம்.
இதுவே சாத்தியமானதுமாகும் என்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய காலத்திலும் அதனையே சாத்தியமாக்க அதை மக்களிடம் கொண்டு செல்வது அவசியம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM