தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் கடத்தல் : சந்தேக நபர் கைது

17 Mar, 2026 | 01:26 PM
image

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருட்களை தேயிலை பைகளில் வைத்து நீண்டகாலமாக கடத்தி வந்த 48 வயதான சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்த தேயிலை பையில் மறைத்து வைக்கப்பட்டு, விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஹெரோயின் பொதிகளே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பொதிகளுடன் சந்தேக நபர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர், சந்தேக நபர் திங்கட்கிழமை (16) கல்முனை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் வியாழக்கிழமை (19) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு  நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று கொச்சிக்கடை ஆலய ஆராதனையை முன்னிட்டு...

2026-04-21 05:20:06
news-image

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல்களின்...

2026-04-21 05:11:20
news-image

டீசல் கொள்வனவு: 350 கோடி ரூபா...

2026-04-21 04:32:23
news-image

டீசல் கொள்வனவு விவகாரம்: குமார ஜயகொடி...

2026-04-21 04:18:14
news-image

கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த...

2026-04-21 03:56:36
news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19