மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மூன்று விசேட குழுக்கள் நியமனம் - பிரதமர் ஹரினி அமரசூரிய 

Published By: Digital Desk 1

17 Mar, 2026 | 12:01 PM
image

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக நாட்டுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும், தற்போதைய சூழலில் அரசாங்க சேவைகளை எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்வதற்கும் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட வலுசக்தி தேவைகளை தட்டுப்பாடின்றி பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதனூடாக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும், போர் சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து;...

2026-04-12 08:45:28
news-image

ரஷ்யாவிடம் இருந்து நேரடி எரிபொருள் கொள்வனவு...

2026-04-12 09:05:24
news-image

இலங்கையில் மீண்டும் ஒரு மின்வெட்டு அச்சம்

2026-04-12 09:04:32
news-image

கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-04-12 08:21:17
news-image

சீனாவின் திட்டத்தால் தெற்காசிய பொருளாதாரத்தில் பெரும்...

2026-04-12 09:03:28
news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 09:00:35
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17