பாஜக- அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தி'' என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக கட்சியின் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
சமீபகாலமாக சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பாஜக /அதிமுக, திருமதி சசிகலா, மருத்துவர் ஐயா ராமதாஸ் ஆகியோர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும், எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய் செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்பு படுத்தியும் கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
இருப்பினும் பொது மக்களிடையேயும் தொண்டர்கள் இடையேயும் தொடர்ந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளை பகிர வேண்டாம்.'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதியன்று தமிழகத்தில் நடைபெறும் பொது தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நடைபெறுவது உறுதி என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM