தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகள் அறிவிப்பு

16 Mar, 2026 | 04:40 PM
image

தமிழ்நாடு -மேற்கு வங்காளம்- கேரளம்- அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புது தில்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்ததாவது...

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம், தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், தமிழ்நாட்டை ஒட்டி உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதியன்று சட்டைப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதியன்று சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என திகதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.‌

தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதி  அன்று ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெறும்''  என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் ஆறாம் திகதி ஆகும்.

வேட்பு மணி வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் ஏழாம் திகதி என்றும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் ஒன்பதாம் திகதி தி நிறைவு திகதி என்றும் அறிவித்திருக்கும் தேர்தல் ஆணையம்.. ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் போர் வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி...

2026-04-21 14:37:03
news-image

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை செயலாளர் லோரி...

2026-04-21 12:59:32
news-image

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை நீக்கம்; மேலும்...

2026-04-21 10:30:51
news-image

மிரட்டல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது...

2026-04-21 10:37:31
news-image

அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திட்டமில்லை...

2026-04-21 09:35:16
news-image

ஈரானுடன் போர் தொடுக்க இஸ்ரேல் தன்னைத்...

2026-04-21 05:07:36
news-image

ஜம்மு - காஷ்மீர் மலையில் பேருந்து...

2026-04-21 03:47:59
news-image

மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ;...

2026-04-20 18:33:33
news-image

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது...

2026-04-20 16:48:01
news-image

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான...

2026-04-20 16:42:43
news-image

ஏழு வாரங்கள் கடந்தும் நல்லடக்கம் செய்யப்படாத...

2026-04-20 14:59:35
news-image

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ; இன்னும் தீர்மானம்...

2026-04-20 15:03:13