இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் கட்டக் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிசை்சைப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்றையதினம் அதிகாலை 2.30 மணி முதல் 3.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், வைத்தியசாலையின் முதலாவது மாடியில் அமைந்துள்ள 'ட்ரூமா கேர்' தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரெனத் தீப்பற்றியுள்ளது.
இந்த தீ விபத்தின் போது குறித்த பிரிவில் 23 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்துள்ளனர். அவர்களில் 07 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஏனைய மூவர் சிகிச்சைகளுக்காக மாற்றப்படும் போது உயிரிழந்துள்ளனர்.
நோயாளிகளைக் காப்பாற்ற முயன்ற 11 வைத்திய ஊழியர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மின்சாரக் கசிவினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதே பல உயிரிழப்புகளுக்குக் காரணம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாவும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM