பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக திகழ்வதுடன், அண்மையில் வழங்கப்பட்டிருந்த “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் 2017” விருதை தனதாக்கியிருந்தது.

 12 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த விருதை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம்” நிகழ்வு, உலக மனித வளங்கள் அபிவிருத்தி காங்கிரஸ் மற்றும் தொழில் வழங்குநர் வர்த்தக நாம நிறுவனம் ஆகியவற்றினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஊழியர்கள் மீதான அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை, தூரநோக்குடைய சிந்தனை மற்றும் வியாபார கொள்கைகள் மற்றும் வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்வது போன்றன பீப்பள்ஸ் லீசிங் கம்பனியைரூபவ் 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமமாக தெரிவு செய்வதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்திருந்தன.

மனித வளங்கள் அபிவிருத்தி தொடர்பில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இந்த விருதை வென்றமைக்கான இரகசியமாக அமைந்துள்ளது. பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதான அம்சமாக அதன் ஊழியர்கள் காணப்படுகின்றனர். தனது ஊழியர்களை சிறந்த சொத்துக்களாக நிறுவனம் வழிநடத்துக்கிறது. பயிற்சிகள்ரூபவ் அபிவிருத்தி மற்றும் நலன்புரி போன்றன பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் மனித வளங்கள் கொள்கையின் பிரதான உள்ளம்சங்களாக அமைந்துள்ளன.

லீசிங் துறையில் முன்னோடியாக தொடர்ச்சியாக 15 வருடங்கள் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் திகழ்வதுடன், மனித வளங்கள் துறையை தொடர்ச்சியாக மேம்படுத்தி வந்துள்ளது.

தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக இந்த விருதை பெற்றுக்கொண்டமையானது, சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், மனித வளங்கள் தொடர்பில் பீப்பள்ஸ் லீசிங் காண்பிக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாராத நிதிசார் துறையில் சந்தை முன்னோடி எனும் ஸ்தானத்தை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் பேணி வருகிறது. 

நிறுவனத்தின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில்ரூபவ் லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வர்த்தக கடன்கள், பெக்டரிங் (Factoring), மார்ஜின் டிரேடிங் (Margin Trading) மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களான பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியவற்றூடாக மேலும் பெறுமதி சேர்க்கப்பட்ட நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தில் காணப்படும் விசேட அம்சமாகரூபவ் பல்வகை நிதிச்சேவைகளை ஒரே கூரையின் கீழ் நட்புறவான சேவையின் மூலம் வழங்குதல் காணப்படுகிறது.