டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் தாக்கி ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அங்கு விமானப் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் ஸ்தம்பித்தது.
ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், டுபாய் விமான நிலையம் இலக்கு வைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இன்றையதினம் அதிகாலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலினால் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் தாங்கி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என டுபாய் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு கருதி விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. டுபாய் நோக்கி சென்ற பல விமானங்கள் அபுதாபியில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
விமான நிலையத்தின் ஒரு பகுதிச் செயற்பாடுகள் காலை 11.30 மணி அளவில் மீள ஆரம்பிக்கப்பட்டன.
எமிரேட்ஸ் விமான சேவை தனது பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையவை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட அட்டவணையின் கீழ் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் தமது விமானங்களின் தற்போதைய நிலையை இணையத்தளத்தின் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல், வளைகுடா நாடுகள் மீது இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக ஹோமுஸ் நீரிணையின் முடக்கம் மற்றும் இத்தகைய தாக்குதல்கள் காரணமாக சர்வதேச விமான எரிபொருள் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM