உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று அறிமுகம்

Published By: Digital Desk 3

16 Mar, 2026 | 02:14 PM
image

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, கேகாலை மாவட்ட பொது மருத்துவமனையின்  சிறுநீரகப் பிரிவில் ஒழுங்கு செய்யப்பட்ட வைபவம் ஒன்றில், குருதி 'டயாலிசிஸ்' ற்குத் தேவையான உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட  உபகரணத் தொகுதி ஒன்று  அறிமுகம் செய்யப்பட்டது. 

சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி மேற்படி டயாலிசிஸ்  சிகிட்சை மூலம்  குருதியை சுத்திகரிப்பு செய்வர். கடும் பாதிப்புற்றவர்கள் தத்தமது வீடுகளில் இதனை மேற்கொள்வதும் உண்டு. அவ்வாறு வீடுகளில் மேற்கொள்பவர்களுக்கு அதற்கென தயாரிக்கப்பட்ட விசேட பை ஒன்று  தேவைப்படுகின்றது. இதனை கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது. அதுவே இவ்வைபவத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நோயாளிகளுக்கு தமது வீட்டிலிருந்தே இதைச் செய்து கொள்ள இது வசதி யளிக்கிறது.

வைத்தியர் நுவான் அரவிந்த பார்த்தலோமிஸ் வழிகாட்டுதலின் கீழ் நடந்த இந்நிகழ்வில், கேகாலை பொது வைத்தியசாலையின் நீரிழிவு நிபுணர் வைத்தியர் கயானி சமரசிங்க, ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் அமல்கா முனசிங்க மற்றும் விளையாட்டு உடற்கல்வி அறிவியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்ரோஹித குணரத்ன ஆகியோர் சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நோயாளிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சதுரு டிகிரிரத்னவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்தியர் நுவான் அரவிந்த தெரிவித்தாவது, 

 தமது பிரிவில் 12 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன எனவும், இதனால் சுமார் 90 நோயாளிகளுக்கு சேவைகளை வழங்க முடியும்.  தெற்கு வைத்தியசாலை  ஊழியர்கள்  அதிகபட்ச ஆதரவை வழங்கி வருகின்றனர் என்றார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கண்டி, பல்லேகலே முதலீட்டு மண்டலத்தில் அமைந்துள்ள கெலுன் லைஃப் சயின்ஸ் (பிரைவேட்) லிமிடெட்,  நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர். ஐ. சத்தியமூர்த்தியின் அறிவுறுத்தலின் பேரில், மேற்படி  பை தொடர்பான  செயல் விளக்கத்தை  சுதர்மன் விஜயசுந்தர அறிமுகப்படுத்தினார்.

மேற்படி  பிரிவுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக வழங்கிய கேகாலைச் சேர்ந்த திருமதி. என். மாரப்பனாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20