சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது; இணக்கப்பாட்டுடன் கூடிய சுபநேரங்கள் நாளை வெளியீடு!

16 Mar, 2026 | 12:59 PM
image

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இணக்கப்பாட்டுடன் கூடிய சுபநேர அட்டவணையை வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிந்தும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

சுபநேரக் கணிப்பீடு தொடர்பில் நிலவி வந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (16) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில் 'ஏபா' பஞ்சாங்க கணிப்பாளர் இந்திக ஏபா செனவிரத்ன, 'திரசர' பஞ்சாங்க கணிப்பாளர் சமத் கொத்தலாவல மற்றும் மாற்று சுபநேரக் கணிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, அனைவரும் இணங்கக்கூடிய பொதுவான சுபநேரங்களை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இணக்கம் காணப்பட்ட இந்தச் சுபநேர அட்டவணை நாளை செவ்வாய்க்கிழமை (17) அச்சிடப்பட்டு, உத்தியோகபூர்வமாக 'அரச சுபநேர அட்டவணை' என்ற பெயரில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்ட பின்னர், புதிய குழுவொன்று நியமிக்கப்படாத நிலையில் இம்முறை சுபநேரக் கணிப்பீடு தொடர்பில் சோதிடர்களிடையே கடும் கருத்து முரண்பாடுகள் நிலவி வந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை இது குறித்து சோதிடர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இந் றிலையில், 'சர்வஜன பலய' அமைப்பு கடந்த சனிக்கிழமை 17 மூத்த சோதிடர்களை ஒன்றிணைத்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சுபநேரத்தை உருவாக்க முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது அரசாங்கம் இந்த இணக்கப்பாட்டு தீர்மானத்தை எட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20