ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி குறித்து ஆதாரங்களை வெளியிடுவதாக உதய கம்மன்பில தெரிவிப்பு!

Published By: Digital Desk 1

16 Mar, 2026 | 12:14 PM
image

அரசாங்கத்தினால் வெளியிடப்படாத ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்த தகவல்களை எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமார் ஒன்றரை வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட ஆய்வின் அடிப்படையில், 'ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி' (ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரைக் கண்டறிதல்) எனும் ஆய்வு நூல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நூல் மார்ச் 31ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

கடந்த 07 வருடங்களாக ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் அரசியலுக்காக விற்கப்பட்டு வருகின்றது. இதனை வைத்து அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, கலைக்கப்பட்டன. ஆனால், எந்தவித அடிப்படையும் இன்றிஇராணுவத்தினரை துன்புறுத்துவதற்கு இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. 

ஈஸ்டர் தாக்குதலை வைத்து முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது. உண்மையான சூத்திரதாரி யார் என்பதை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்துவோம்." என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03