கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பிற்கு ஆளானவர்களில் 5 லட்சம் பேர் சொரியாஸிஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. நாள்பட்ட சொரியாஸிஸ் நோய் மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று என்றும் குறிப்பிடப்படுகிறது. இதனை ஒரு நிழல் நோய் என்றும் மருத்துவத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
தோலிற்கான நோய் எதிர்ப்பு மையத்தில் ஏற்படும் குறைபாடுகளால் தான் சொரியாஸிஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாக தோல் பகுதி சிவந்து காணப்படுவது, சமச்சீரற்ற நிலை, குருதி கசிந்து வெளியேறும் நிலை, திட்டுதிட்டுக்களாக அல்லது செதில் செதில்களாக இருப்பது போன்றவை இதற்கான வெளிப்படையான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு மையம், இந்த நோய் கிருமிகளை தவறாக கருதி மேலும் மேலும் உற்பத்தி செய்வதாலும் இவை பரவுகின்றன.
சொரியாஸிஸை முழுதாக குணப்படுத்த இயலாது. ஆனால் கட்டுக்குள் வைக்க இயலும். வராமல் தடுக்க இயலும். தொடக்க நிலையிலேயே இதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் மேலும் பரவாத வகையில் தடுக்க இயலும். குறிப்பாக இவ்வகையான செல்கள் குளிர்காலத்தில் அதிக வீரியத்துடன் செயல்படுகின்றன. அதன் போது கூடுதல் கவனத்துடன் இருந்தால் இதனை கட்டுப்படுத்த இயலும். பெரும்பாலானவர்களுக்கு பிளேக்ஸ் சொரியாஸிஸ் (Plaque psoriasis) என்ற பாதிப்பு தான் ஏற்படுகிறது. இது உச்சந்தலை, முழங்கை, முழங்கால், முதுகின் பக்கவாட்டுப் பகுதி ஆகிய இடங்களில் ஏற்படுகிறது.
சொரியாஸிஸ் பாதிக்கப்பட்டவர்களில் சரியான தருணங்களில் சிகிச்சையெடுக்காதவர்களும், மருத்துவர்கள் பரிந்துரைத்த வழிமுறைகளை பின்பற்றாதவர்களும் சொரியாஸிஸ் ஓர்த்தோரைடீஸ் என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். சொரியாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் இதற்கு ஆளாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து சிகிச்சைகள் பெறவேண்டும். இதற்காக பல மருத்துவ சிகிச்சை முறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முதலில் மனஅழுத்த பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்கவேண்டும். அதையும் மீறி மன அழுத்தத்திற்கு ஆளானால் இத்தகைய நோய்கிருமிகள் பல்கி பெருகும். சில சிகிச்சைகள் ஒத்து வரவில்லை என்றால் அதனை தவிர்த்துவிடவேண்டும். ஏனெனில் இதன் காரணமாகவும் இவை ஏற்படலாம். தோலில் எவ்வகையான பாதிப்பும் ஏற்படா வண்ணம் தற்காத்துக் கொள்ளவேண்டும்.இதனை மருத்துவத்துறையில் கொப்னேர் நிகழ்வு என்று குறிப்பிடுவோம். உடல் எடையை கண்காணித்து கொள்ளவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும்.
வைத்தியர். ஆறுமுகம்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM