அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளைச் சீர்செய்வதற்கும், எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் பீஜிங்கில் நடைபெறவுள்ள ட்ரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பிற்குப் பாதை அமைப்பதற்கும் ஏதுவாக, இரு நாடுகளின் உயர்மட்டப் பொருளாதார அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பாரிஸில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் மற்றும் சீன உப பிரதமர் ஹி லிபெங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
அமெரிக்காவின் சோயாபீன்ஸ் உட்பட விவசாயப் பொருட்களைச் சீனா கொள்வனவு செய்வது தொடர்பான இணக்கப்பாடுகள் மீளாய்வு செய்யப்படும்.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் மற்றும் அதன் விளைவாக ஹோமுஸ் நீரிணை முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள மசகு எண்ணெய் விலை உயர்வு குறித்து இரு தரப்பும் அவதானம் செலுத்தவுள்ளன. சீனா தனது மசகு எண்ணெய் தேவையில் 45 சதவீதத்தை இந்த நீரிணை ஊடாகவே பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அக்டோபரில் தென் கொரியாவின் பூசான் நகரில் எட்டப்பட்ட தற்காலிக வர்த்தக உடன்படிக்கையின் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு நாடுகளும் ஆராயவுள்ளன. சீனா இதுவரை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி துறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக உள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM