பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின் சம்பியன் கனவை கலைத்து பெலிக்கன்ஸை சம்பியனாக்கியது சொலிட்

15 Mar, 2026 | 01:31 AM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தீர்மானம் மிக்க சுப்பர் 8 கால்பந்தாட்டப் போட்டியில் 28ஆவது நிமிடத்திலிருந்து பத்து விரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட அநுராதபுரம் சொலிட் கழகம், ஜாவா லேன் கழகத்தின் சம்பியன் கனவை கலைத்து குருநாகல் பெலிக்கன்ஸ் கழகத்தை சம்பியனாக்கியது.



சொலிட் கழகத்துக்கும் ஜாவா லேன் கழகத்துக்கும் இடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இதன் காரணமாக ஜாவா லேன் கழகம் உப சம்பியன் பட்டத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.


போட்டியின் 28ஆவது நிமிடத்தில் சொலிட் கழக வீரர் மென்சா ப்றின்ஸ் விதி முறைகளை கடுமையாக மீறியதால் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.


இதனை அடுத்து சொலிட் கழகம் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எனினும் ஜாவா லேன் கழகத்துக்கு ஈடுகொடுத்து சொலிட் கழகம் விளையாடியது.


இடைவேளையின்போது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளையின் பின்னர் 56ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற 30 யார் தூர ப்றீ கிக் மூலம் மொஹமத் அஸாத் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.


ஆனால் ஜாவா லேன் கழகத்தினால் நீண்ட நேரம் முன்னிலையில் இருக்க முடியவில்லை.



போட்டியின் 62ஆவது நிமிடத்தில் சொலிட் அணித் தலைவர் எஸ். ஞானரூபன் இடதுபுறத்திலிருந்து மிகவும் இலாவகமாக பரிமாறிய பந்தை ஹென்றி சிபேஸே தனது தலையால் முட்டி அருமையான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.


இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போட முயற்சித்தன. ஆனால் கடைசிவரை அது கைகூடவில்லை.
இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம் கடைசிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்னரே சம்பயின் பட்டத்தை உறுதிசெய்துகொண்டது.


சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக பிறமாவட்ட அணி ஒன்று சம்பியனாகியது. 2022இல் மாத்தறை சிட்டி சம்பியனாகி இருந்தது.


ஜாவா லேன் கழகத்திற்கு இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக அதிர்ஷ்டம் கிட்டவில்லை. அக் கழகம் மீண்டும் உப சம்பியனானது.
செரெண்டிப் கழகம் 3ஆம் இடத்தையும் சொலிட் கழகம் 4ஆம் இடத்தையும் பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட...

2026-09-12 03:07:12
news-image

ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில்  பங்குபற்றவுள்ள...

2026-09-12 01:48:15
news-image

நியூ யங்ஸை வெற்றிகொண்டு சுப்பர் லீக்கில்...

2026-09-11 21:08:42
news-image

இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திப்பது இலங்கையா?...

2026-09-11 19:03:22
news-image

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய...

2026-09-11 15:57:35
news-image

நாவலப்பிட்டியில் மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி!

2026-09-11 14:22:48
news-image

சுப்பர் லீக் முதல் சுற்றை ஆறுதல்...

2026-09-10 20:41:01
news-image

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு பயிற்சிப்...

2026-09-10 19:35:15
news-image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்...

2026-09-10 17:35:42
news-image

ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பிடித்த...

2026-09-10 17:05:27
news-image

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும்...

2026-09-10 16:31:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும்...

2026-09-10 13:58:38