வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில் அபார சதம் குவித்தார் ஜேடன்

15 Mar, 2026 | 01:19 AM
image

(நெவில் அன்தனி)

றோயல் கல்லூரிக்கும் சென். தோமஸ் கல்லூரிக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற 147ஆவது நீல வர்ணங்களின் சமர் சனிக்கிழமையன்று வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டி பெரியளவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாததுடன் முதல் நாள் ஆட்டத்திலிருந்தே போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டால் போதும் என்ற மனப்பான்மையுடன் சென் தோமஸ் அணியினர் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.

எனினும் கடைசி நாளான சனிக்கிழமை சென் தோமஸ் வீரர் ஜேடன் அமரவீர மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அபார சதம் குவித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.

றோயல் கல்லூரி வீரர்களும் அவருக்கு கைலாகு கொடுத்து வாழ்த்தியதன் மூலம் சிறந்த பண்பு வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

ஜேடன் அமரவிக்ரம சதம் குவித்ததும் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என மத்தியஸ்தர்கள் கூறியதற்கு அவர் இணங்கியதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை முடிவடைந்த இப் போட்டியில் ஒரு சதமும் ஐந்து அரைச் சதங்களும் குவிக்கப்பட்டன.

இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் இரண்டு அணிகளுக்கும் டி.எஸ். சேனாநாயக்க ஞாபகார்த்த கேடயம் இணைந்து வழங்கப்பட்டது.

எனினும் கடந்த வருடம் சென். தோமஸ் வெற்றிபெற்றதால் டி.எஸ். சேனாநாயக்க ஞாபகார்த்த கேடயம் கல்கிஸ்ஸைக்கு கொண்டு செல்லப்பட்டது.

எண்ணிக்கை சுருக்கம்

சென். தோமஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 302 (ரெஷோன் சொலமன்ஸ் 66, ஜேடன் அமரவீர 52, அவினாஷ் பெர்னாண்டோ 50, மேதுக்க குணரத்ன 44, ககன் கமகே 49 - 4 விக்., செஹந்து சூரியஆராச்சி 64 - 3 விக்.)

றோயல் 1ஆவது இன்: 261 - 9 விக். டிக்ளயார்ட் (ரமிரு பெரேரா 83, ரெஹான் பீரிஸ் 62, துஹேன் உடுவெல 33, கிம்ஹாம் மெண்டிஸ் 60 - 4 விக்., அபீத் பரணவிதான 59 - 2 விக்.)

சென். தோமஸ் 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது 176 - 6 விக். (ஜேடன் அமரவீர 100 ஆ.இ., மேதுக்க குணரத்ன 21. ஆரோன் கொடிதுவக்கு 10 - 2 விக்.), ககன் கமகே 32 - 2 விக்.)

விசேட விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் ஆட்டநாயகன்: ஜேடன் அமரவீர (சென். தோமஸ்), சிறந்த பந்துவீச்சாளர்: அறிமுக வீரர் ககன் கமகே (றோயல்), சிறிந்த களத்தடுப்பாளர்: உதன்த கங்கேவத்த (றோயல்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03