(நெவில் அன்தனி)
கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நிறைவடைந்த 15ஆவது இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரியை 5 விக்கெட்களால் வீழ்த்தி கடந்த வருட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்து கல்லூரி கொழும்பு.
இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமரை 4 - 4 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இந்து கல்லூரி கொழும்பு சமப்படுத்தியது.
இந்த வெற்றியானது இந்த வருடம் வைர விழாவை கொண்டாடும் இந்து கல்லூரி கொழும்புவுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இப் போட்டியில் 82 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்புவுக்கு வெற்றி இலகுவாக அமைந்துவிடவில்லை.
ஐந்து விக்கெட்களை இழந்த பின்னரே இந்து கல்லூரி கொழும்பு வெற்றியை சுவைத்தது.
ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் பொறுமையுடனும் சிறந்த நுட்பத்துடனும் துடுப்பெடுத்தாடிய திவாகரன் யாதவ் 120 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய வேலாந்துரை அபினேஷ் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பந்துவீச்சில் சுதர்சன் சுபர்ணன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கனகராஜா நித்தீஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களையும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களையும் பெற்றன.
இரண்டாவது இன்னிங்ஸில் யாழ். இந்து கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
எண்ணிக்கை சுருக்கம்
யாழ். இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 102 (ரவீந்திரன் ஆதித்தியன் 31, தினேஷ்ராமன் பிரேமிகன் 26, நேசரூபன் நிருஜன் 14, விஷ்வநாதன் யுவராஜ் 33 - 5 விக்., ராமநாதன் தேஷ்கர் 20 - 3 விக்., திவாகரன் யாதவ் 19 - 2 விக்.)
இந்து கொழும்பு 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 119 (சுரேஷ் சர்விஷ் 32, வேலாந்துரை அபினேஷ் 24, முத்துகுமார் அபிஷேக் 22, சுதர்சன் சுபர்ணன் 43 - 6 விக்., நேசரூபன் நிரூஜன் 22 - 2 விக்.)
யாழ். இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 98 (சுதர்சன் சுபர்ணன் 34, நேசரூபன் நிரூஜன் 21, ராமநாதன் தேஷ்கர் 20 - 4 விக்., விஸ்வநாதன் யுவராஜ் 44 - 4 விக்.)
இந்து கொழும்பு - வெற்றி இலக்கு 82 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 82 - 5 விக். (திவாகரன் யாதவ் 34 ஆ.இ., வெலாந்துரை அபினேஷ் 22, ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஆ.இ., சுதர்சன் சுபர்ணன் 28 - 2 விக்., கனகராஜ் நித்தீஸ் 29 - 2 விக்.)
விருதுகள்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: சுதர்சன் சுபர்ணன் (யாழ். இந்து) சிறந்த பந்துவீச்சாளர்: விஸ்வநாதன் யுவராஜ் (இந்து கொழும்பு) சிறந்த களத்தடுப்பாளர்: கனகராஜ் நித்தீஸ் (யாழ். இந்து), ஆட்டநாயகன்: திவாகரன் யாதவ் (இந்து கொழும்பு)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM