இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், "இலங்கையில் இந்து சமய மறுமலர்ச்சி: மரபும் மாற்றமும்" எனும் கருப்பொருளிலான 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வரங்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமானது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மனாந்தஜி மகராஜ் மங்கள விளக்கேற்றி ஆசியுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆய்வரங்கின் உத்தியோகபூர்வ அமர்வுகள் ஆரம்பமாகின.
இந்த ஆய்வரங்கை முன்னிட்டுத் தொகுக்கப்பட்ட "இலங்கையில் இந்து சமய மறுமலர்ச்சி" எனும் ஆய்வு நூலின் முதற்பிரதி இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் அணில் அபேகுணவர்த்தன, நூலின் முதற்பிரதியைச் சிவஸ்ரீ ஈஸ்வரக் குருக்கள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் ஆகியோருக்கு வழங்கி வைத்தார்.
பிரதம அதிதி அணில் அபேகுணவர்த்தன தனது உரையில், நாட்டின் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதில் இவ்வாறான ஆய்வரங்குகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேராசிரியர் ச. முகுந்தன் உள்ளிட்ட அறிஞர்கள் இந்து சமய மறுமலர்ச்சியின் வரலாற்றுப் பின்னணிகள் குறித்துச் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் யதுகுலசிங் அனிருத்தனன், சிரேஷ்ட பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இந்து சமய ஆர்வலர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM