சத்யராஜ் - வெற்றி இணைந்து நடிக்கும் ' 4 விண்டோஸ்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

14 Mar, 2026 | 05:00 PM
image

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களான சத்யராஜ் - வெற்றி முதன்மையான வேடங்களில் இணைந்து நடித்திருக்கும் '4 விண்டோஸ்'  படத்தில் இடம்பெற்ற 'புளிப்பு' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நரேந்திரன் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் '4 விண்டோஸ்' திரைப்படத்தில் சத்யராஜ் , வெற்றி, பிரார்த்தனா நாதன், கோவை சரளா, சின்னி ஜெயந்த் , சச்சு, எம் எஸ் பாஸ்கர், கூல் சுரேஷ் ,மாறன், அருள்தாஸ், லிசி அண்டனி, வையாபுரி, டி எஸ் ஆர் ,டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெரார்ட் ஃபிலிக்ஸ் இசையமைத்திருக்கிறார்.‌கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சேகர் ஜி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இளையராஜா சேகர் தயாரித்திருக்கிறார்.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் படத்தில் இடம்பெற்ற ' தம்மாசி..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது .

இந்தப் பாடலை பாடலாசிரியர் கு . கார்த்திக் மற்றும் கானா வினோத் ஆகியோர் இணைந்து எழுத ,பின்னணி பாடகர்கள் கானா வினோத் மற்றும் ஜெரார்ட் ஃபிலிக்ஸ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் தயாராகி இருக்கும் இந்த பாடல் இணைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின்...

2026-05-12 14:55:36
news-image

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழ் கலாசாரத்தின் குரல்:...

2026-05-12 13:20:05
news-image

29 - திரைப்பட விமர்சனம்

2026-05-11 16:47:59
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் புதுமுகங்கள் நடித்திருக்கும்...

2026-05-11 16:27:20
news-image

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முன்னோட்டம்...

2026-05-11 16:26:17
news-image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்'...

2026-05-11 16:17:16
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-11 15:15:36
news-image

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தீப் கிஷன்...

2026-05-11 15:14:08
news-image

ஓகஸ்டில் ரசிகர்களை 'ஐ அம் கேம்...

2026-05-11 15:04:47
news-image

காதலும், இன்னிசையும் கலந்து தயாராகும் 'சைக்கிள்...

2026-05-11 14:58:11
news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00