சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918 புதிய தாதியர் பயிற்சியாளர்கள் நியமனம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு!

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 05:02 PM
image

இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கில், புதிய தாதியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று rசனிக்கிழமை (14) முற்பகல் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

2025ஆம் ஆண்டிற்குரிய, 2022ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் பாடசாலைகளில் 3 ஆண்டு காலப் பயிற்சியினைப் பெறவுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஆரம்பத்தில் 2,625 பேரை மாத்திரமே இணைத்துக் கொள்ள அனுமதி இருந்தது. எனினும், உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்த எண்ணிக்கையை 2,918 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இவர்கள் தாதியர் பாடசாலைகளில் பதிவு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 06ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பமாகும்.

இவர்கள் 2029 ஏப்ரல் மாதம் இறுதித் தேர்வை எதிர்கொண்டு, அதே ஆண்டு ஜூன் மாதளவில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

தற்போது மத்திய அரசின் கீழ் 29,749 பேரும், மாகாண சபைகளின் கீழ் 13,804 பேரும் என மொத்தம் 43,553 தாதியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இது சுகாதார சேவையின் மொத்த ஆளணியில் 30 சதவீதமாகும்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், சுகாதார சேவை என்பது எப்போதும் ஒரு அத்தியாவசிய சேவையாகும். இது வெறும் வேலைவாய்ப்பு அல்ல, ஒரு புனிதமான சேவை" என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தச் சேவையில் ஏற்படும் ஏதேனும் தடங்கல் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் தாதியர் பாடசாலை அதிபர்கள் எனப் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54