காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான மர்மப்பொருள் கரையொதுங்கியது: பொதுமக்கள் ஆர்வம்!

14 Mar, 2026 | 04:08 PM
image

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழகக்கோன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை கரையொதுங்கியுள்ள இந்த மர்மப்பொருள், சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்டதாகக் காணப்படுகிறது.

இது முழுமையாக 'ரெஜிபோம்' (மென்புடைப்பு மீள்மம்) எனப்படும் ஒருவகை இலகுவான பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் கரையில் தரைதட்டும்போது அல்லது துறைமுகங்களில் நங்கூரமிடும்போது, கப்பலின் மேலோட்டிற்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புத் தடுப்பாக  இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த மர்மப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் முன்னெடுத்து வருவதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். தற்போது காத்தான்குடி கடற்கரையில் காணப்படும் இப்பொருளைப் பார்வையிடுவதற்காகப் பெருமளவிலான பொதுமக்கள் அங்கு திரண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54