அரச சேவையில் செயற்கை நுண்ணறிவு (AI): இரத்தினபுரியில் நிறைவேற்று அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வு!

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 02:00 PM
image

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட செயலமர்வு, கடந்த 12 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘AI for Transforming Public Service’  என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஆதரவுடன் சப்ரகமுவ மாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த அரச நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் விசேட நடவடிக்கையாக, அரச  அதிகாரிகளை தெளிவூட்டுதல், தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அலுவலகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல்/செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் வளவாளரான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA)  முன்னாள் பணிப்பாளர்களான ஹர்ஷ புரசிங்க, சமிச அபேசிங்க ஆகியோர் இந்த செயலமர்வில் வளவாளர்களாக பங்களித்தனர்.

சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனீதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர்/அரச அதிபர் கே.ஜி.எஸ். நிஷாந்த மற்றும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த நிறைவேற்றுத் தர அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20
news-image

ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுக்கு செயலாளர் விடுத்துள்ள...

2026-04-16 15:12:05