(நெவில் அன்தனி)
கண்டி திரித்துவ கல்லூரிக்கும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையில் கண்டி அஸ்கிரிய விளையாட்டரங்கில் நடைபெற்றவரும் மலையகத்தின் 107ஆவது நீல வர்ணங்களின் சமரில் தோல்வி அடையாமல் இருப்பதற்கு அசாத்திய ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் புனித அந்தோனியார் அணி இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணி வீரர் ஆதம் ஹில்மி குவித்த அபார சதத்தின் உதவியுடன் திரித்துவ அணி மிகவும் பலமான நிலையில் இருக்கிறது.
இன்றைய தினம் தனது முதலாவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 66 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து திரித்துவ அணி சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது.
திமன்த மாதவ 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
6ஆம் இலக்க வீரர் ஆதம் ஹில்மி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 125 ஓட்டங்களைக் குவித்து கடைசியாக ஆட்டம் இழந்தார்.
இதனிடையே மற்றொரு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வீரர் செத்மிக்க செனவிரட்னவுடன் 8ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களை ஆதம் ஹில்மி பகிர்ந்தார்.
செத்மிக்க செனவிரட்ன 29 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சிசில் ஹேமக்க அத்தநாயக்க 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கவீஷ சமரதுங்க 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 107 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த புனித அந்தோனியார் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
புனித அந்தோனியார் அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM