இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன் 6 விக்கெட் குவியல்; முதல் நாளன்று 22 விக்கெட்கள் சரிந்தன

Published By: Vishnu

13 Mar, 2026 | 09:06 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் யாழ். இந்து கல்லூரி அணிக்கும் இந்து கல்லூரி கொழும்பு அணிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 15ஆவது இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாளன்று பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாக 22 விக்கெட்களை வீழ்த்தினர்.

யாழ். இந்து கல்லூரி அணித் தலைவரும் கடந்த வருடம் இந்துக்களின் சமரில் ஆட்டநாயகனுமான சுதர்சன் சுபர்ணன் 6 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

இதன் மூலம் இந்துக்களின் சமர் வரலாற்றில் அடுத்தடுத்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் 6 விக்கெட் குவியல்களை பதிவுசெய்த வீரர் என்ற மைல்கல் சாதனையை சுபர்னன் நிலைநாட்டி பலத்த பாராட்டைப் பெற்றார்.

இந்து கல்லூரி கொழும்பு சார்பாக விஷ்வநாதன் யுவராஜ் 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளினதும் பந்துவீச்சும் களத்தடுப்பும் மிகச் சிறப்பாக இருந்தது.

களத்தடுப்பில் வீரர்கள் எடுத்த பல பிடிகள் மிகவும் அற்புதமாக இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி புற்தரை ஆடுகளத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

யாழ். இந்துவின் கடைசி 5 விக்கெட்கள் வெறும் 14 ஓட்டங்களுக்கு சரிந்தன.

துடுப்பாட்டத்தில் நான்கு வீரர்கள் மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ரவிந்திரன் ஆதித்தியன் (31), நேசரூபன் நிரூஜன் (14) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 47 ஓட்டங்களே போட்டியில் இதுவரை சிறந்த இணைப்பாட்டமாக பதிவாகி உள்ளது.

அவர்களை விட தினேஸ்ராமன் சகோதரர்களான பிரேமிகன் 26 ஓட்டங்களையும் பிரீதிகன் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் விஷ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அணித் தலைவர் இராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பின்வரிசை வீரர்கள் பிரகாசிக்கத் தவறியதுடன் ஐவர் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் புற்தரை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் ஆட்டம் இழந்தனர்.

இந்து கொழும்பு அணி துடுப்பாட்டத்தில் சுரேஷ் சர்விஷ் 32 ஓட்டங்களையும் வெல்லாந்துரை அபினேஷ் 24 ஓட்டங்களையும் முத்துகுமார் அபிஷேக் 22 ஓட்டங்களையும் ஹர்ஷ மிதுமின 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுதர்சன் சுபர்னன் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நேசரூபன் நிரூஜன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

யாழ். இந்து கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 5 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக மத்தியஸ்தர்களினால் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இரண்டாம் நாள ஆட்டம நாளை தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03