ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அரசாங்க தரப்பில் இருந்து பதிலளிப்பதற்கு இரு வாரகால அவகாசம் கோரப்பட்டதை அடுத்துநேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் சபையில் எழுந்து நின்று கோஷமிட்டு உடன் பதிலளிக்குமாறு கோரினர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே குறித்தான சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.
தினேஷ் குணவர்தன எம்.பி கேள்வி எழுப்பும் போது,
முன்னாள் இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு பிரதானி என்ற வகையிலும் இராஜதந்திர உயர் அதிகாரி என்ற வகையிலும் ஜகத் ஜயசூரியவை பாதுகாப்பதற்கு இராஜதந்திர மட்டத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? ஜகத் ஜயசூரியவை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? ஜகத் ஜயசூரிய விவகாரம் தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடா? இல்லையேல் முரணான கருத்தை முன்வைத்த அமைச்சர் பொன்சேகாவுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என தினேஷ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரான வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சபையில் இல்லாத காரணத்தினால் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல எழுந்து இரு வார கால அவகாசம் கோரினார்.
இரு வார காலஅவகாசம் கோரப்பட்டதை அடுத்து சபையில் கூட்டு எதிர்கட்சியினர் எழுந்து நின்று கோஷமிட்டு உடன் பதிலளிக்க கோரினர். விமல் வீரவன்ச , மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட கூட்டு எதிரக்கட்சி எம்.பியினர் இவ்வாறு கோஷமிட்டனர். இதன்போது அமைதியாக சபையில் இருக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரினார்.
சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல பதிலளிக்கும் போது,
ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல. நாங்கள் எந்தவொரு இராணுவ வீரர்களையும் சிறையில் அடைக்க மாட்டோம். முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலாகும். எனினும் தற்போது சரத் பொன்சேகா தொடர்பில் எதிரணியினர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர். எனவே ஜகத் ஜயசூரிய குறித்தான பதில் இரு வாரத்தில் வழங்குவோம் என்றார்.
இதன்போது விமல் வீரவன்ச இடைநடுவே ஒழுங்கு பிரச்சினை எழுப்பி பேசுகையில்,
இதனை சாதாரணமாக விட்டு விடமுடியாது. இது யுத்த குற்றத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். ஆகவே அரசாங்கம் ஜகத் ஜயசூரியவை பாதுகாப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து உடன் பதில் வழங்க வேண்டும் என்றார்.
இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு இரு வாரம் தேவையில்லை. இன்றே பதிலளிக்க முடியும் ஏன் தாமதம் என தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.
இதன்போது இரு வாரத்தில் அரசாஙகம் பதில் வழங்கும் என சபை முதல்வர் உறுதியளித்துள்ளார். ஆகவே பொறுத்திருங்கள் என கூறி சபாநாயகர் கருஜெய சூரிய சர்ச்சையான நிலைமையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM