தாய்லாந்து பாராளுமன்றத்தை பார்வையிட்டார் சாணக்கியன் 

13 Mar, 2026 | 04:58 PM
image

இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின்  இணைத் தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தாய்லாந்து பாராளுமன்றத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 

'திறந்த  அரசாங்க  கூட்டாண்மை' என்ற  தலைப்பில்  தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றபோதே அவர் அந்நாட்டின் பாராளுமன்றத்தையும் பார்வையிடச் சென்றிருந்தார். 

இதன்போது உள்ளடக்கமான ஆட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பை வலுப்படுத்துவது தொடர்பாக தாய்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதலானோருடன் கலந்துரையாடினார். 

தாய்லாந்தின் பாங்காக்கில் Inclusion Champions Network Study Visit நிகழ்வு மார்ச் 10 முதல் 14 வரை நடைபெறுகிறது. 

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தாய்லாந்து பாராளுமன்றத்தையும் பார்வையிட்ட சாணக்கியன், அதனைத் தொடர்ந்து, செனட்டர் Pornchai Witayalerdpanஐயும் சந்தித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர்கள், குடியுரிமை அமைப்புகள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் சமூக உட்சேர்க்கை தொடர்பாக செயற்பட்டு வரும் சர்வதேச கூட்டாளர்களுடனும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்த சாணக்கியன்,

இந்த சந்திப்புகள் மூலம் திறந்த மற்றும் பொறுப்புணர்வு கொண்ட பாராளுமன்ற நடைமுறைகளை முன்னேற்றுவதில் இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இதன் ஊடாக ஜனநாயக நிறுவனங்களில் உட்சேர்க்கையை வலுப்படுத்துவதில் தாய்லாந்து பின்பற்றும் அணுகுமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

பாராளுமன்றங்கள் அனைத்து சமூகங்களின் தேவைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆட்சி அமைப்புகள் உட்சேர்க்கைமிக்கதாக அமைய முக்கிய பங்காற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் வரலாற்றாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவமும் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், குடியுரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச கூட்டாளர்கள் ஆகியோருக்கிடையிலான ஒத்துழைப்பு, ஜனநாயக செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை, பிரதிநிதித்துவம் மற்றும் சமமான பங்கேற்பை வலுப்படுத்துவதில் முக்கியமானதாகும் என்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54