(நமது நிருபர்)
இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் 'திறந்த அரசாங்க கூட்டாண்மை' என்ற தலைப்பில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.
வெஸ்மினிஸ்டர் ஜனநாயகத்துக்கான அறக்கட்டளை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் திறந்த ஆட்சி சீர்திருத்தங்களை ஆதரிக்கும் அதன் பிராந்திய திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் குடிமக்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திறந்த அரசாங்க கூட்டாண்மைக் கட்டமைப்பின் கீழ் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தினர்.
மேலும் ஆட்சி முறையில் தெளிவுத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துவது, அதேபோல் திறந்த ஆட்சி சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் பாராளுமன்றங்களின் பங்கை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
இலங்கையில் பாராளுமன்றத் திறந்த தன்மையையும் நிறுவனத் தெளிவுத்தன்மையையும் வலுப்படுத்துவது மிக முக்கியமானது. திறந்த பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவராக, பொது நம்பிக்கையை உயர்த்தவும், தகவல்களுக்கான அணுகலை மேம்படுத்தவும், சட்டமன்ற செயல்முறைகளில் குடிமக்கள் பங்கேற்பை விரிவுபடுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
மேலும், இந்த பிராந்திய கற்றல் பரிமாற்றம் மூலம் திறந்த ஆட்சி உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் பாராளுமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும் குடிமக்கள் சமூக அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகள் குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டன.
இத்தகைய பிராந்திய சந்திப்புகள் இலங்கையில் ஜனநாயக ஆட்சி மற்றும் திறந்த பாராளுமன்ற முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM