(சரண்யா பிரதாப்)
இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தின் (IEPSL) வருடாந்த சுற்றாடல் ஒன்று கூடல் நிகழ்வு கொழும்பில் கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வு “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் எதிர்காலத்திற்கான திறனை செயலாக மாற்றுவோம்” என்ற கருப்பொருளில் 11 மற்றும் 12 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வின் வரவேற்புரையை இலங்கை சுற்றாடல் நிபுணர்கள் நிறுவனத்தின் அசேல இட்டவெல ஆற்றினார்.
முதல் நாள் நிகழ்வில் நாட்டில் 2 D பொலித்தீன் பொதிகள் கழிவகற்றலுக்கான ஒருங்கிணைந்த நீடித்த உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) மற்றும் மீள சேகரிக்கும் மாதிரி உத்தி மற்றும் செயல்படுத்துதல் தொடர்பில் மாகாணசபை ஆளுநர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் விருத்தினராக கலந்து கொண்ட அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் இலங்கையர்களால் இயற்கை பொருட்களால் ஆன பொதியிடல் முறைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில தசாப்தங்களில் ஏற்பட்ட மனப்பாங்கு மாற்றம் மற்றும் நவீன் வாழ்க்கை வசதி முறையினால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து, அது இன்று பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, வருடாந்தம் நாட்டில் 1.6 மில்லியன் மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. நாளாந்தம் சுமார் 938 மெட்ரிக் தொன் கழிவுகள் உருவாகும் நிலையில், அவற்றில் 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மேலும் மொத்த கழிவுகளில் 04 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த சமநிலையின்மையால், கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அதிக பங்களிப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.
இந்த திட்டம் முன்னோடி முயற்சியாக மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற சுத்தமான சூழலை உருவாக்க அரசாங்கம், உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அநுராதபுர காலத்தில் மன்னர் பண்டுகாபய கழிவு முகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்துவதற்காக விசேட குழுக்களை நியமித்திருந்தார் என வரலாற்றை நினைவுகூர்ந்தார். அந்த காலகட்டத்தில் சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.
மேலும் பௌத்த தர்மத்தில் உள்ள ‘வனரோப சூத்திரம்’ மூலம் சுற்றாடலை பாதுகாப்பது இரவும் பகலும் புண்ணியம் சேர்க்கும் செயல் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த காலத்தில் மக்கள் பனை ஓலை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொதியிடல் முறைகளைப் பயன்படுத்தினார்கள்.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் வசதியும் இலாபமும் முன்னிலைப்படுத்தப்பட்டதால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து, அது சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அவசியம்என்றார்.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷி கொடிப்பிலி ஆராச்சி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ, தேசிய திடக் கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் புஷ்ப குமார, இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர் நிறுவனத்தின் தலைவர் அசேல இடவெல, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மான்னப்பெரும,சுற்றாடல் அமைச்சின் உதவி பணிப்பாளர் ஜீவா பலகஸ்வெவஉள்ளிட்ட பல அதிகாரிகளும் உள்ளூராட்சி சபை தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்வில், நீர் தொடர்பான சவால்களை நிர்வகித்தல் தொடர்பாக பேராசிரியர் ஹர்ஷ ரத்னவீர சிறப்புரையை ஆற்றினார்.
தொழில்துறை நீர் முகாமைத்துவத்துக்கான நிலைபேண்தகு மற்றும் மீட்சித் தன்மை கொண்ட அணுகுமுறைகள், செயல்திறனை மேம்படுத்துதல், சுழற்சி நீர் பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் நீர் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான புதிய தீர்வுகள் தொடர்பில் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
இந்த குழு கலந்துரையாடலை டோஸ்கான் லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கலாநிதி தரிந்து ரித்திகல நெறியாள்கை செய்தார்.
ஐரோப்பிய நீர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ ரத்னவீர, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் திட்டப்பணிப்பாளர் கலாநிதி எஸ். கே. வேரகொட மற்றும் வேஸ்ட்-டு-வேல்யூ நிறுவனத்தின் பணிப்பாளர் ருஷாந்த சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் எதிர்காலத்திற்கான செயற்திறன் தொடர்பில் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது. இந்த குழு விவாதத்தை இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிராணி யசரத்ன நெறியாள்கை செய்தார்.
குழு கலந்துரையாடலில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அஜித் டி சில்வா, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதி சமேன் விதானகே,
ஐதராமணிமணி ஆடை நிறுவனத்தின் இரசாயன பொறியாளர் லியோனி டி வாஸ், காலநிலை நிதி மற்றும் அனர்த்த ஆய்வாளர் ரோஹன் கூரே,COP30 இளைஞர் பேச்சாளர் சந்துன் ஜயசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது இலங்கை சுற்றாடல் நிபுணர்கள் நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் கொண்டாடப்பட்டது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM