ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தொடர்ந்து அறிவித்து வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகத்துக்கான முக்கிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதையாக விளங்கும் நீரிணை வழியே எண்ணெய் கப்பல்கள் கடக்க முடியாத நிலை தற்போதும் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பல்வேறு தடைகளைக் கடந்து, கச்சா எண்ணெய் கப்பலொன்று இந்தியா சென்றடைந்துள்ளது.
புதன்கிழமை (11) இரவு மும்பை துறைமுகத்தை அடைந்த இந்த கப்பல் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 335 தொன் (சுமார் 10 லட்சம் பீப்பாய்கள்) கச்சா எண்ணெய்யைத் தாங்கிச் சென்றுள்ளது. ஈரான், மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியில் முதல் முதலாக ஹோர்முஸ் நீரிணையை கடந்து, பாதுகாப்பாக ஒரு எண்ணெய்க் கப்பல் சென்றுள்ளதெனில், அது இந்தப் கப்பலே என்று கூறப்படுகிறது.
லைபீரிய நாட்டுக் கொடியுடன் சென்ற “ஷென்லொங் சூயல்மாக்ஸ்” என்ற கப்பல், சவூதி அரேபியாவின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி முனையமான ராஸ் தனுராவிலிருந்து (Ras Tanura) கடந்த 1ஆம் திகதி அதன் பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்தியரான கெப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 பேர் கொண்ட குழுவினர் இந்தக் கப்பலில் பயணித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட கப்பல், தனது பயணத்தின்போது உலகின் மிக முக்கியமான எண்ணெய்க் கப்பல்களின் கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை 8ஆம் திகதி கடந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் படைகளின் தாக்குதல் மற்றும் வேறு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக தப்பிக்கவும் கண்காணிப்பில் சிக்காமல் இருக்கவும், கப்பலானது நீரிணையை கடக்க முற்பட்டபோது, அதன் தானியங்கி அடையாள அமைப்பான ஏ.ஐ.எஸ் இணைப்பு தற்காலிகமாக அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலின் அமைவிடம், அதன் இயக்கத்தை காட்டும் சமிக்ஞை இணைப்பை நிறுத்திவிட்டு, “டார்க் மோட்” முறையில் ரகசியமாக ஹோர்முஸ் நீரிணையை இந்த எண்ணெய்க் கப்பல் கடந்ததாகதாகவும் பின்னர், குறிப்பிட்ட கடற்பரப்பு எல்லையை பாதுகாப்பாக கடந்த பின்னர், 9ஆம் திகதி மீண்டும் அந்த இணைப்பை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.
AIS எனப்படும் கப்பல் அடையாள ஒளி அமைப்பை, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக செயலிழக்கச் செய்து பின்னர், இயக்கியமையே ஹோர்முஸ் நீரிணையை இந்த எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக கடக்க காரணம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போர்க்கால சூழலில் எதிரிப் படையினர் கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களின் அடையாளம், வேகம், இருப்பிடத்தை கண்டறிவதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் கப்பல்களின் தொழில்நுட்ப இணைப்புகள் அணைக்கப்படக்கூடும் என குறிப்பிடப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியான நுட்பங்களை கையாண்டு ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து புதன்கிழமை மும்பை துறைமுகத்தை இந்த எண்ணெய்க் கப்பல் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM