தெஹிவளை மற்றும் மாத்தறையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

Published By: Digital Desk 1

13 Mar, 2026 | 10:26 AM
image

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (12) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கிலோகிராம் 158 கிராம் ஹேஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தெஹிவளை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மாத்தறை உயன்வத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று வியாழக்கிழமை (12) பகல் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் உயன்வத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22