வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Published By: Digital Desk 1

13 Mar, 2026 | 09:07 AM
image

அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரேவீதி பகுதியில் தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (12) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக துப்பாக்கி 01, உயிருள்ள தோட்டாக்கள் 05 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ஹம்பாந்தோட்டை, மரேவீதி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27