பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பணிப்பாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான பிரடெரிக் வூட்லர், ஊடகத்துறையில் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பிற்காக மற்றுமொரு கௌரவ விருதினைப் பெற்றுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை 12ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற"SLI-BA 2026 - Sri Lanka International Business Awards" விழாவில், அவருக்கு இந்த கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களில் அவர் பெற்றுக்கொள்ளும் மூன்றாவது முக்கிய விருது இதுவாகும்.
அதன்படி, முதலாவதாக, 2025 டிசம்பர் 29, 'People’s Excellency Awards' விழாவில் "பொது தொடர்பாடல் விருது" (Public Communication Award) விருதை பெற்றார்.
அதனை தொடர்ந்து, 2026 பெப்ரவரி 02, 'தேசத்தின் பெருமை 2026' (Pride of the Nation 2026) விருதை பெற்றார்.
பிரடெரிக் வூட்லரின் தலைமையில் இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவு நவீனமயப்படுத்தப்பட்டமைக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஊடக நிறுவனங்களுக்கு துல்லியமான தகவல்களை உடனுக்குடன் வழங்கியமை.
பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) மற்றும் இணையதளங்கள் ஊடாக பொதுமக்களுக்கு நேரடித் தகவல்களைக் கொண்டு சென்றமை.
நவீன ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப "Podcast" (ஒலிப்பதிவு) மற்றும் டிஜிட்டல் காணொளித் தொடர்களை அறிமுகப்படுத்தி, எந்த நேரத்திலும் பொதுமக்கள் தகவல்களைப் பெறும் வசதியை ஏற்படுத்தியமை.
சமூக சேவை: ஒரு விரிவுரையாளராக பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி, சமூக முன்னேற்றத்திற்காக ஆற்றிய பங்களிப்பு.
இந்த விருதுகளின் மூலம் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும், பொலிஸ் ஊடகப் பிரிவிற்கும் பெரும் கௌரவம் கிடைத்துள்ளதாகப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM