புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66 - 3 விக்.

Published By: Vishnu

12 Mar, 2026 | 09:22 PM
image

(நெவில் அன்தனி)

கண்டி அஸ்கிரிய விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான கண்டி திரித்துவ அணிக்கும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையிலான மத்திய மலைநாட்டின் 107ஆவது நீல்வர்ணங்களின் சமரில் திரித்துவ அணி பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித அந்தோனியார் அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

சிசல் ஹேமக்க அத்தநாயக்க ஏற்படுத்திய இரண்டு இணைப்பாட்டங்களினால் புனித அந்தோனியார் அணி வீழ்ச்சியிலிருந்து மீண்டது.

ஒரு கட்டத்தில் புனித அந்தோனியார் அணி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

சிசல் ஹேமக்க அத்தநாயக்க பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் தினுல் விஜேசிங்கவுடன் 48 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் கௌஷிக்க குமாரசிங்கவுடன் 64 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார்.

அத்தநாயக்க 64 ஓட்டங்களையும் குமாரசிங்க 44 ஓட்டங்களையும் விஜேசிங்க 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கனில்க அன்தனி 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தினித்த சிறிவர்தன 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சனிரு சேனாரத்ன 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திரித்துவ அணி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அசத்திய திமன்த மஹாவித்தான 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல்: ஜஸ்வர்...

2026-04-20 10:52:16
news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03