இலங்கையின் முன்னணி விருந்தோம்பல் நிறுவனமான Cinnamon Hotels & Resorts நிறுவனத்தின் துணைத் தலைவர் Darsh Gallage, ஜெர்மனின் Ocean Cruise இன் பணிப்பாளரான Thushaan Kunabalasingam ஐ சந்தித்து பல்வேறு சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்த முக்கிய கலந்துரையாடலொன்றை ஜேர்மனியில் முன்னெடுத்தார்.

இதன்போது, இலங்கையின் விருந்தோம்பல் துறையின் விரிவாக்கம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டதுடன், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையை சர்வதேச அளவில் விரிவுபடுத்தும் நோக்கில், பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வடக்கு பகுதியில் புதிய ஹோட்டல் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஒரே வகையான உபகரணங்கள் மற்றும் உத்தரவுகளை நாட்டில் செயல்படும் 17 ஹோட்டல்களில் ஒரே மாதிரியாக ஒருங்கிணைக்கும் சாத்தியங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேபோல், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து Promo Lanka நிறுவனத்துடன் இணைந்து மதிப்பீடு செய்யும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணங்களை இலங்கையின் முக்கிய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை நிகழ்வான Sri Lanka Hotel Show இல் காட்சிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்படுகின்றன.
இதனுடன், கடல் சுற்றுலா (Ocean Cruise) துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்பின்னர் கடல் சுற்றுலா துறையுடன் தொடர்புடைய வாய்ப்புகளை ஆராய்வதற்காக நேரடி தொடர்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், இலங்கையின் விருந்தோம்பல் கல்வி துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் முயற்சியாக, உள்ளூர் விருந்தோம்பல் பயிற்சி நிறுவனங்களுக்கும் ஜெர்மனி நாட்டிற்கும் இடையிலான ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்லும் பொறுப்பையும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, நிறுவனத்தின் நிர்வாக சபையுடன் ஆலோசித்து “Board Advisor – International Cruise & Institutional Development” என்ற அதிகாரப்பூர்வ ஆலோசகர் பொறுப்பை உருவாக்கும் சாத்தியமும் பரிசீலிக்கப்பட உள்ளது.
ஜெர்மன் நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டு வருகிறோம் என Ocean Cruise இன் பணிப்பாளர் Thushaan Kunabalasingam தெரிவித்தார்.
இந்தப் பொறுப்பின் மூலம் கடல் சுற்றுலா துறையை ஒருங்கிணைத்தல், ஐரோப்பிய சந்தைகளில் விரிவாக்க வாய்ப்புகளை கண்டறிதல், மற்றும் விருந்தோம்பல் கல்வி திட்டங்களை நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி மூலோபாயத்துடன் இணைத்துச் செல்லுதல் போன்ற நோக்கங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM