ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுக்கும் போது, நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் கட்டமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொழில்நுட்பத்தின் ஊடாக மிகப்பாரிய அளவிலான தரவுகளை மிகக்குறுகிய காலத்தில் ஆராய்ந்து, இலக்குகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும் எனவும்,முன்னர் மணித்தியாலக்கணக்கில் எடுக்கப்பட்ட இராணுவச் செயற்பாட்டு நடைமுறைகளை, தற்போது சில வினாடிகளுக்குள் நிறைவு செய்யக்கூடியதான நன்மைகள் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னர் மணித்தியாலக்கணக்கில் எடுக்கப்பட்ட இராணுவச் செயற்பாட்டு நடைமுறைகளை, தற்போது சில வினாடிகளுக்குள் நிறைவு செய்யக்கூடியதாக உள்ளது.
தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேற்றமடைந்திருந்தாலும், தாக்குதல் நடத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எப்போதும் மனிதர்களாலேயே எடுக்கப்படுவதாக அட்மிரல் பிராட் கூப்பர் இதன்போது உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், அமெரிக்காவின் இந்தத் தொழில்நுட்பப் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM