ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி செலுத்திய இளைஞர் கைது

12 Mar, 2026 | 03:31 PM
image

(செ.சுபதர்ஷனி)

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டியை செலுத்திய 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவர் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தை செலுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியு.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப்பிரிவில் புதன்கிழமை (11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் முச்சக்கரவண்டி  ஒற்றை மிக ஆபத்தான முறையிலும், ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் செலுத்தப்படும் வீடியோ காட்சிகள் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன.சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ காட்சிகளின் அடிப்படையில், ஒரு சக்கரத்தில்  அபாயகரமான முறையில் முச்சக்கரவண்டியை செலுத்திய 26 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் கஞ்சா போதை பொருளைப்பயன்படுத்தி  வாகனத்தை செலுத்தியமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கண்டி - கட்டுகஸ்தோட்டை பகுதியில் முச்சக்கரவண்டியில் சாகசம் செய்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, வாகன இலக்கத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய கடுகண்ணாவ பல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், 10 ஆம் திகதி இரவு முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டார்.

வீதியில் பயணித்த ஏனைய  வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும்  வாகனத்தை செலுத்தியதால், இவருக்கு எதிராக " கொலை முயற்சி" உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

 முறையான வாகன உரிமம்  மாற்றம் இன்றி குறித்த நபருக்கு வாகனத்தை விற்பனை செய்த நபருக்கு எதிராகவும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.   விதிமீறலில் ஈடுபட்ட வாகனம் குறித்த காணொளியை  பொலிஸாருக்கு வழங்கிய நபருக்கு நன்றி தெரிவிப்பதோடு, இத்தகைய ஒழுக்கமற்ற சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் பொது மருத்துவமனையின் திடீர் விபத்து...

2026-09-16 15:55:10
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவு...

2026-09-16 15:40:46
news-image

கட்டுநாயக்கவில் உணவகத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து...

2026-09-16 15:43:27
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57