யாழில் கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உட்பட 5 பேர் வைத்தியசாலையில்! 

12 Mar, 2026 | 02:32 PM
image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர் வாடகைக் கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களின் காருக்கு எதிரே வந்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது. 

அதன்போது காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் மற்றும் கார் சாரதி, முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஆகிய ஐவரும் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54