கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனம் மோதியதில், இன்று வியாழக்கிழமை (12) அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதன்போது, வாகனத்தின் ஹேண்ட்பிரேக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து சென்று, பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய மாணவன் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வாகனத்தின் உரிமையாளரான பணிப்பாளர், தான் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே இந்த விபத்து எதிர்பாராத விதமாக இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM