மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி மற்றும் காயம் ; பல சிறுவர்களுக்கு 'பேரழிவு' நிலை! - யுனிசெஃப் கவலை

12 Mar, 2026 | 02:38 PM
image

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மில்லியன்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் "பேரழிவு" நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்  எச்சரித்துள்ளது.

யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரை 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வன்முறையினால் காயமடைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர்.

இதில் உள்ளடங்குபவை:

ஈரான்: 200 சிறுவர்கள் உயிரிழப்பு.

லெபனான்: 91 சிறுவர்கள் உயிரிழப்பு.

இஸ்ரேல்: 4 சிறுவர்கள் உயிரிழப்பு.

குவைத்: 01 சிறுவர் உயிரிழப்பு.

வன்முறை மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்  கவலை வெளியிட்டுள்ளது.

தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக நூறாயிரக்கணக்கான சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன், இந்தப் போர் நெருக்கடியினால் மில்லியன்கணக்கான சிறுவர்கள் தமது கல்வி கற்கும் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

"சிறுவர்களைக் கொலை செய்வதையோ, அங்கவீனப்படுத்துவதையோ அல்லது அவர்கள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதையோ எதனாலும் நியாயப்படுத்த முடியாது. இப்பிராந்தியத்தில் உள்ள சுமார் 200 மில்லியன் சிறுவர்கள், உலகம் விரைவாகச் செயற்படும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்" என யுனிசெஃப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா லூசியானா துப்பாக்கிச் சூடு: 8...

2026-04-19 23:57:42
news-image

மலேசியா சபாவில் தீ விபத்து: 200...

2026-04-19 21:22:43
news-image

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து:...

2026-04-19 21:09:13
news-image

மத்திய கிழக்கில் அமைதி நிலவ 4...

2026-04-19 15:17:17
news-image

அணுசக்தி உரிமையைப் பறிக்க ட்ரம்ப்பிற்கு அதிகாரமில்லை...

2026-04-19 14:40:58
news-image

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியா...

2026-04-19 14:23:33
news-image

ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக...

2026-04-19 10:21:42
news-image

அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும்...

2026-04-18 18:28:54
news-image

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள்...

2026-04-18 16:56:24
news-image

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:...

2026-04-18 15:40:40
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்:...

2026-04-18 15:07:16
news-image

அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சு பாகிஸ்தானில்...

2026-04-18 12:12:45