மட்டக்களப்பில் விபத்துகளைத் தடுக்க விசேட நடவடிக்கை : பொலிஸார் அறிவுறுத்தல்

12 Mar, 2026 | 02:08 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய பொலிஸார் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்னவின் வழிகாட்டலில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழகக்கோனின் மேற்பார்வையில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் இக்கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, சுமார் 70 துவிச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றில் இருளில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்கள் (ஒளிர் அட்டைகள்) ஒட்டப்பட்டன. இரவு வேளைகளில் பின்னால் வரும் வாகனங்களுக்கு, முன்னால் துவிச்சக்கர வண்டி செல்வதை இதன் மூலம் தெளிவாக அடையாளப்படுத்த முடியும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்துக் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம். சந்தன பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும்போது;

"இரவு வேளைகளில் துவிச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் வயோதிபர்கள் கறுப்பு அல்லது அடர் பச்சை நிற ஆடைகளைத் தவிர்த்து, வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும். இதன் மூலம் பின்னால் வரும் வாகன சாரதிகளுக்கு வீதியில் பயணிக்கும் ஆட்களை இலகுவாக கண்டுகொள்ள முடியும். இது விபத்துகளைத் தவிர்க்க பெரிதும் உதவும். மேலும், துவிச்சக்கரவண்டிகளை சரியான முறையில் பயன்படுத்தாதவர்கள் மீது வருங்காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த...

2026-04-21 03:56:36
news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55