மஸ்கெலியா , சாமிமலை பிரதான வீதியில் நேற்று  மாலை சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பெனியன் சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் தீடீரென  தீப்பிடிக்க  ஓட்டுனர்  மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு பாய்ந்துள்ளமையால் அவர் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.

இந்த மோட்டர் சைக்கிளை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து  தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 2 ½ இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.