நெஸ்லே லங்கா நிறுவன முகாமைத்துவச் சபையின் அங்கத்தவர்கள் (இடமிருந்து வலப்புறமாக): கீழ வரிசை, ஜீவா ரூபசிங்க – உதவிப் பணிப்பாளர், கீர்த்தி பதிராஜா – உதவிப் பணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள்), காஞ்சன பெர்னாண்டோ – விநியோகச் சங்கிலிப் பணிப்பாளர், ருவான் வெலிக்கல – நிறுவன விவகாரங்கள் மற்றும் தொடர்பாடல்கள் துறைப் பணிப்பாளர், குமுது டயஸ் – நிதி மற்றும் கட்டுப்பாட்டுத்துறைப் பணிப்பாளர், பேர்ணி ஸ்டெஃபான் – தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர், இனோகா சிரிமான்ன – மனித வளத்துறைப் பணிப்பாளர், மொஹமட் அலி – உணவு மற்றும் பானங்கள் துறைப் பணிப்பாளர், தரிந்த ஜெயசுந்தர – விற்பனைத்துறைப் பணிப்பாளர், சமந்த கணேதிக – தொழில்நுட்பத் துறைப் பணிப்பாளர், மதுரங்க பெரேரா – உதவிப் பணிப்பாளர் (நெஸ்லே புரொஃபெஷனல்).
‘நல்லுணவு நல்வாழ்வு’ என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகின்ற நெஸ்லே லங்கா லிமிட்டெட் நிறுவனம், இலங்கையில் ஆற்றிவரும் பணிகளின் 120 ஆண்டுகள் நிறைவை இவ்வாண்டில் கொண்டாடுகிறது.
1906ஆம் ஆண்டு மிகவும் எளிமையாகச் செயல்பட ஆரம்பித்த நெஸ்லே லங்கா நிறுவனம், நாட்டின் முன்னணி உணவு மற்றும் பானவகை நிறுவனமாகத் தற்போது வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற அதன் தயாரிப்புகளில் 90% க்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றும், எதிர்கால தலைமுறையினருக்கும் என அனைவரதும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உணவு மற்றும் பானங்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன் வழிநடத்தப்படும் நெஸ்லே லங்கா நிறுவனம், நுகர்வோரை மகிழ்விப்பதன் மூலமும், வாழ்வாதாரங்களை வழங்குவதன் மூலமும், பூமியைப் பாதுகாப்பதன் மூலமும் இலங்கை மக்களின் வாழ்வுகளை வளப்படுத்தி வந்துள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக, இளமை முதல் முதுமை வரை உள்ளூர் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுவையான மற்றும் போசாக்கு மிக்க தெரிவுகளை வழங்குவதன் மூலம் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நன்மைகளை ஆற்றுவதில் நெஸ்லே லங்கா நிறுவனம் கவனம் செலுத்தி வந்துள்ளது.
நம்பகமான மற்றும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமங்கள் வரிசையின் மூலம் நுண்ணூட்டச்சத்து செறிவூட்டப்பட்ட தயாரிப்புகளை நெஸ்லே லங்கா வழங்கி ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் அதேசமயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தில் சமரசமின்றிய கவனம் செலுத்தியுள்ளது.
மேலும், இந்நிறுவனம் நெஸ்டோமோல்ட் மற்றும் மைலோ போன்ற புகழ்பெற்ற வர்த்தகநாமங்களின் மூலமாக விளையாட்டுச் செயற்பாடுகளுக்கு அனுசரணைகளை வழங்கி, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.
அதன் தயாரிப்புகளுக்கு அப்பால், நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நற்பயன் வியாபித்துள்ளது.
உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தென்னை செய்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதன் மூலம், நீண்டகால கூட்டாண்மைகள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புள்ள வழியில் மூலப்பொருள் கொள்முதல் நடவடிக்கைகள் மூலம் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை இந்நிறுவனம் தொடர்ந்து வழங்கிவருகிறது.
இளைஞர்களுக்கு வலுவூட்டுவதிலும் நெஸ்லே லங்கா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது. 'Nestlé Needs YOUth' (நெஸ்லே நீட்ஸ் யூத்) முயற்சியின் மூலம் இலங்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகமாகப் பெற உதவும் அறிவு, திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் அதே நேரத்தில், இலங்கையில் அபிமானம் பெற்ற தொழில்தருநராகத் திகழ்வதில் அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
தனது பணியாளர்களை மையமாகக் கொண்டு நெஸ்லே நிறுவனம் இயங்கி வருவதுடன், பன்மைத்துவம், சமர்வு (Equity) மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பணியிடத்தை வளர்ப்பது நிறுவனம் செயல்படுவதன் அடிப்படையாக அமைந்துள்ளது.
'E-Connected' போன்ற நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள் ஊடாக வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த உதவுவதன் மூலமும், வேலை செய்வதற்கான அனைவரையும் உள்ளடக்கிய வழிமுறைகளைத் தோற்றுவிப்பதன் மூலமும் மாற்றுத்திறனாளிகளுக்கு நெஸ்லே லங்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
பூமிக்கு நன்மை பயக்கச் செய்வது என்பது, நீண்டகால நோக்கத்துடனும் உறுதியான செயல் நடவடிக்கைகளுடனும் நெஸ்லே லங்கா நிறுவனம் அணுகும் ஒரு பொறுப்புணர்வாகும். 2050ஆம் ஆண்டளவில் நிகர பூச்சியக் காபன் வெளியேற்றத்தை (Net Zero) அடைவதற்கான அதன் இலட்சியத்தால் வழிநடத்தப்பட்டு, நிலைபேற்றியல் என்பது நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஆழமாகப் பொதிந்துள்ளது.
கடந்த காலங்களில் நெஸ்லே லங்கா நிறுவனம் அதன் செயல்பாடுகளின் மூலமாகச் சுற்றுச்சூழல் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் உற்பத்திச் செயல்பாடுகளின் போது காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியாக, 2024ஆம் ஆண்டில் உயிரியல் திணிவு (Biomass) கொதிகலனொன்றை அமைத்ததுடன், குருநாகலில் உள்ள அதன் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையில் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்தும் வழிமுறையையும் கைக்கொண்டது அடங்கலாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சுழற்சிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்நிறுவனம் தனது பொதியிடல் கழிவுகளுக்குத் தொடர்ந்தும் சிந்தனைமிக்க மற்றும் முன்னெச்சரிக்கை அணுகுமுறை கொண்ட தீர்வுகளை நாடி வருகிறது.
2019ஆம் ஆண்டில் கிருமி அகற்றப்பட்ட பான அட்டைப் பெட்டிகளில் பிளாஸ்டிக்கிலான உறிஞ்சுக் குழாய்களுக்குப் பதிலாகக் காகிதத்தாலான உறிஞ்சுக் குழாய்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகச் செயற்பட்டது. அத்துடன் கிருமி அகற்றப்பட்ட பான அட்டைப் பெட்டிகளுக்கு நாட்டில் முதல்முறையாக மீள்சுழற்சிக்கான ஆலையை நிறுவுவதற்கும் ஆதரவளித்தது.
இவற்றினூடாக, உள்ளூர் மீள்சுழற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாரிய அளவில் பொறுப்புணர்வுடன் கழிவகற்றலைச் செயற்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவியுள்ளது. எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், 2026ஆம் ஆண்டில் 100% பிளாஸ்டிக் நடுநிலை (Plastic Neutral) வகிக்கும் இலக்குடன் நெஸ்லே லங்கா நிறுவனம் பயணித்து வருகின்றது.
இந்தச் சாதனை மைல்கல் குறித்து நெஸ்லே லங்கா நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான பேர்னி ஸ்டெஃபான் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் 120 ஆண்டுகள் நீண்ட மகத்துவம் கொண்ட பயணத்தைக் கொண்டாடுவது நெஸ்லே நிறுவனத்தில் எம் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கின்ற ஒரு தருணமாகும்.
இந்தச் சாதனை மைல்கல் எங்கள் வணிகம் நீடித்து நிலைபெற்றுள்ளதை மாத்திரமன்றி, இலங்கையில் குடும்பங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், நாடு முழுவதும் நாங்கள் கட்டியெழுப்பியுள்ள வலுவான கூட்டாண்மைகளையும் பிரதிபலிக்கிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இலங்கையின் பொருளாதாரத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குதல், வாழ்வாதாரங்களை ஆதரித்தல் மற்றும் சமூகங்களுக்கு நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தல் எனப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதே நேரத்தில், நுகர்வோர் நேசிக்கும் சுவையான மற்றும் போசாக்கு மிக்க தயாரிப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
நெஸ்டோமோல்ட், மைலோ, மெகி (Maggi) போன்ற புகழ்பெற்ற வர்த்தகநாமங்கள் மூலம், இலங்கை வீடுகளில் அன்றாட தருணங்களில் நாம் அங்கம் வகித்து வருவதுடன், குடும்பங்கள் வளம் பெறவும், ஆரோக்கியமான, உடல்ரீதியாகச் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதற்கும் உதவுகிறோம். எதிர்காலத்தை உற்றுநோக்குகையில், நோக்கம், பொறுப்புணர்வு மற்றும் அக்கறையுடன் இந்தப் பயணத்தைத் தொடர்வதிலும், தினந்தோறும் இலங்கை மக்களின் வாழ்வுகளை வளப்படுத்துவதிலும் நாங்கள் மிக உறுதியாக உள்ளோம்.”
எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், நெஸ்லே லங்கா நிறுவனம் உள்நாட்டில் தனது தடம் பதிப்பை வலுப்படுத்துவதிலும், தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பூமியின் மீது தனது நற்பயனை ஆழப்படுத்துவதிலும் மிக உறுதியாக உள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM