தற்போதைய சூழலில், சமையல் எரிவாயுவை (LPG) மிகக் கவனமாகப் பயன்படுத்துவது அவசியமாகிறது. எரிவாயுவை சேமிக்க உதவும் சில முக்கிய குறிப்புகள் இதோ;
தண்ணீர் கொதிக்க வைக்க அல்லது பால் காய்ச்ச இண்டக்ஷன் அடுப்பை பயன்படுத்தலாம். இது எரிவாயு தட்டுப்பாடு காலங்களில் சிறந்த மாற்று.
குடிப்பதற்குத் தேவையான வெந்நீரை ஒரே முறையில் சூடுபடுத்தி பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அடுப்பை பற்ற வைப்பதை தவிர்க்கலாம்.
அடுப்பைப் பற்ற வைப்பதற்கு முன்பே காய்கறிகளை நறுக்குவது, மசாலாக்களைத் தயார் செய்வது என அனைத்தையும் முடித்துவிட வேண்டும். அடுப்பை எரியவிட்டு காய்கறி நறுக்குவது எரிவாயுவை வீணடிக்கும்.
ஃபிரிட்ஜில் இருந்து எடுக்கும் பொருட்களை நேரடியாக அடுப்பில் வைக்க வேண்டாம். அவை அறை வெப்பநிலைக்கு (Room Temperature) வந்த பிறகு சூடுபடுத்தினால் குறைந்த அளவே எரிவாயு செலவாகும்.
முடிந்தவரை பெரும்பாலான உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவும். இது சாதாரண பாத்திரங்களை விட 20% முதல் 50% வரை எரிவாயுவை மிச்சப்படுத்தும்.
பர்னரின் அளவை விட பெரிய பாத்திரங்களை பயன்படுத்துங்கள். பாத்திரத்தின் ஓரங்களைத் தாண்டி தீச்சுடர் வெளியே வந்தால் வெப்பம் வீணாகிறது என்று அர்த்தம்.
எப்போதும் பாத்திரங்களை மூடி வைத்து சமைக்கவும். இதனால் ஆவி வெளியேறாமல் உணவு விரைவாக வேகும்.
அடுப்பின் பர்னர் நீல நிறச் சுடருடன் எரிகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். மஞ்சள் நிறத்தில் எரிந்தால் பர்னரில் அடைப்பு உள்ளது என்று பொருள், இது அதிக எரிவாயுவை உறிஞ்சும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை குறைத்துவிடுங்கள். அதிக தீயில் வைப்பதால் உணவு சீக்கிரம் வேகாது, மாறாக தண்ணீர் மட்டுமே ஆவியாகும்.
அரிசி மற்றும் பருப்பு வகைகளைச் சமைப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே ஊற வைத்தால், அவை மிக விரைவாக வெந்துவிடும்.
சமைக்கும்போது அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். அதிக தண்ணீரைச் சுண்ட வைக்க அதிக நேரம் அடுப்பு எரிய வேண்டியிருக்கும்.
குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் உணவருந்துவது சிறந்தது. தனித்தனியாக சாப்பிடும்போது ஒவ்வொரு முறையும் உணவை சூடுபடுத்துவதால் அதிக எரிவாயு வீணாகிறது.
அடுப்பில் வைக்கும் பாத்திரத்தின் வெளிப்பகுதி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு வைக்கவும். ஈரப்பதம் இருந்தால், அதை உலர்த்தவே சிறிது எரிவாயு வீணாகும்.
சமைத்து முடித்தவுடன் மறக்காமல் ரெகுலேட்டரை (Regulator) அணைத்து விடுங்கள். இது மிகச்சிறிய அளவிலான கசிவை தடுப்பதுடன் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
முட்டை வேகவைக்கவோ அல்லது காய்கறிகளை ஆவியில் வேகவைக்கவோ பாத்திரம் நிறையத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். காய் மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் இருந்தால் போதும்.
குக்கரில் சாதம் வைக்கும்போதே, அதனுள்ளேயே ஒரு சிறிய பாத்திரத்தில் பருப்பு அல்லது காய்கறிகளையும் வைத்து ஒரே விசிலில் அனைத்தையும் வேகவைக்கலாம்.
காய்கறிகள் முக்கால்வாசி வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்துவிடுங்கள். அந்தப் பாத்திரத்தில் இருக்கும் வெப்பத்திலேயே மீதி கால்வாசி வெந்துவிடும். இது தினமும் 5-10 நிமிட எரிவாயுவை மிச்சப்படுத்தும்.
டீ, காபி அல்லது குடிதண்ணீர் சூடுபடுத்த சிலிண்டரைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இண்டக்ஷன் அடுப்பை பயன்படுத்துங்கள்.
ஒரு கப் சுடுதண்ணீர் தேவைப்பட்டால் கூட சிலிண்டரைத் தேடாமல் கெட்டிலைப் பயன்படுத்துங்கள். இது சிலிண்டரை விட வேகமானது.
வீடுகளில் நாம் செய்யும் இந்தச் சிறு சேமிப்பு ஒட்டுமொத்தத் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க பேருதவியாக இருக்கும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM