நகைச்சுவை நடிகராகவும் , குணச்சித்திர நடிகராகவும் பிரபலமான நடிகர் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர் , வினோத் முன்னா , அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசி நாத் இசையமைக்கிறார். ஃபேண்டஸி கொமடி ஜேனரிலான திரைப்படமாக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''கடந்த தசாப்தங்களில் பாவிக்கப்பட்ட கமெரா ஒன்றை மையமாக வைத்து ஃபேண்டஸி கொமடி ஜேனரில் இப்படம் தயாராகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பு நடைபெறுகிறது'' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM