ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படும் – ஐநா கடும் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

11 Mar, 2026 | 09:22 AM
image

மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (10) வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பாதிப்பு குறிப்பாக ஆசிய நாடுகளையும் வறிய மக்களையும் மிகக் கடுமையாகத் தாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 97 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் மசகு எண்ணெயில் 38 சதவீதமும், எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது இது தடைப்பட்டுள்ளதால் எரிசக்தி விலைகள் (பெற்றோல், டீசல், எரிவாயு) அதிரடியாக அதிகரித்துள்ளன.

சர்வதேச ரீதியில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) இந்த நீரிணை ஊடாகவே விநியோகிக்கப்படுகிறது. இது முடங்கியுள்ளதால் உலகளாவிய உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹோமுஸ் நீரிணை ஊடாக அனுப்பப்படும் மொத்தப் பொருட்களில் 84 சதவீதம் ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. இதனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்காகப் பாரிய விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ;...

2026-04-20 18:33:33
news-image

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது...

2026-04-20 16:48:01
news-image

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான...

2026-04-20 16:42:43
news-image

ஏழு வாரங்கள் கடந்தும் நல்லடக்கம் செய்யப்படாத...

2026-04-20 14:59:35
news-image

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ; இன்னும் தீர்மானம்...

2026-04-20 15:03:13
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி...

2026-04-20 14:25:34
news-image

பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ; நியூசிலாந்து...

2026-04-20 12:59:33
news-image

“ரஷ்ய எண்ணெய்க்காக செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும்...

2026-04-20 12:57:51
news-image

எரிபொருள் விலை அடுத்த ஆண்டு வரை...

2026-04-20 11:43:42
news-image

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான்...

2026-04-20 11:26:26
news-image

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு...

2026-04-20 10:50:12
news-image

அமெரிக்காவை ஒருபோதும் நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர்...

2026-04-20 09:42:20